• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-06-30 11:17:07    
சீனாவில் நரம்பியல் அறுவை சிகிச்சை

cri

"சீனாவின் நம்பியல் ஆறுவை சிகிச்சையின் தந்தை" என அவர் போற்றப்படுகிறார். இத்துறை, சீனாவில் வேரூன்றி வளர்வதற்கு அவர்தாம் காரணம்.

மூளையில் வளரும் கட்டியை அகற்றுவதற்காக 520 பேருக்கு அறுவை சிகிச்சையளித்துள்ளார். ஒரு விழுக்காட்டினர் மட்டுமே உயிர் பிழைக்கவில்லை. ஆக, இன்று பிற நாடுகளில் மருத்துவர் அஞ்சக்கூடிய ஒரு சில நரம்பியல் அறுவை சிகிச்சை, சீனாவில் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

மக்கள் தொகை மிகுந்த நாடான சீனாவில் மூளைக் கட்டிக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதில் வியப்பில்லை. ஒரு இலட்சம் சீன மக்களில், 7 பேர் தற்போது இவ்வாறு பாதிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே, இந்த மருத்துவத் துறையின் வளர்ச்சியானது, சீனாவைப் பொறுத்தவரை மிக மிக இன்றியமையாததாகிறது. இத்தகைய சிகிச்சை வழங்கும் மருத்துவமனைகள் சீனாவில் ஏராளமாக இருப்பதாக மருத்துவ நிபுணர் வாங் பெருமைப்படுகின்றார்.

உலகின் முன்னேறிய மருத்துவ நுட்பங்களைச் சீனா உள்வாங்கி வருகிறது.

1  2  3