தென் மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலத்தின் தென் பகுதியில் எனி கிராமம் அமைந்துள்ளது. சுமார் 70 குடும்பங்களைக் கொண்ட சிறிய கிராமமாகும். இங்கு, ஹானி இனத்தைச் சேர்ந்த எனி மக்கள் வாழ்கின்றனர். ஹானி இனம், சீனாவின் 55 சிறுபான்மைத் தேசிய இனங்களில் ஒப்பீட்டளவில் ஒரு பெரிய இனமாகும். அதன் மக்கள் தொகை 12 லட்சத்து 50 ஆயிரமாகும். இவ்வின மக்கள் முக்கியமாக யுன்னான் மாநிலத்தில் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் கிராமங்களில் பெரும்பாலானவை, கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் முதல் 2500 மீட்டர் உயரமுடைய மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ளன. முன்பு, அவர்கள் முக்கியமாக வேட்டையாடுவதில் ஈடுபட்டிருந்தனர். தற்போது, அவர்கள் முக்கியமாக வேளாண் பணியில் ஈடுபடுகின்றனர்.
நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, இக்கிராமவாசிகளின் வரவேற்பு ஒலியாகும்.
ஆண்களும் பெண்களும் முதியோரும் குழந்தைகளும் எனி மொழிப் பாடலைப் பாடுகின்றனர். இது, வரவேற்பு பாடலாகும். பாடலின் உள்ளடக்கத்தை எமது செய்திமுகவர் புரிந்துகொள்ளவில்லை. இருப்பினும், அவர்களுடைய பாட்டிமாரின் புன்னகையிலிருந்தும் கைத் தட்டிய வண்ணம் பாடிக்கொண்ட சிறுமிகளின் முகத்திலிருந்தும் எனி மக்களின் விரும்தோம்பலை அவர் உணரலாம்.
1 2 3
|