எங்கள் கிராமத்தில் 74 குடும்பங்கள் உள்ளன. மக்கள் தொகை 370. ரப்பர் மரம் வளர்ப்பதன் மூலம் சம்பாதிக்கும் பணம் எங்கள் முக்கிய பொருளாதார வருமானமாகும். முன்பு, மரம் வெட்டி, வேளாண் பயிர் பயிரிட்டனர். 1996ஆம் ஆண்டுக்குப் பின், விளை நிலத்தைக் மீண்டும் காடாக மாற்றிவிட்டு, ரப்பர் மரம் வளர்ப்பதன் மூலம் வாழ்க்கை நடத்தத் துவங்கினோம். எங்கள் வீடுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. முன்பு, சிறிய மூங்கில் வீடுகளில் வசித்தோம். வீடுகளின் கீழ்ப் பகுதியில் பன்றி, கோழி ஆகியவை வளர்க்கப்பட்டன. குடும்பத்தினர் மேற் பகுதியில் வசித்தனர் என்று இக்கிராமத் தலைவர் சென் தெலான் கூறினார்.
இக்கிராமத்தின் சுற்றுப்புறத்தில், பனை மரம்(palm),மூங்கில், பேரிக்காய் மரம், பிளம் மரம், பீச் மரம் ஆகியவை வளர்கின்றன. கிராமத்தின் அருகிலுள்ள மைதானத்தில், காணப்படும் சுமார் 2 மீட்டர் உயரமுடைய 25 சென்டிமீட்டர் விட்டம் கொண்ட மரக் கம்பம், ஹானி இனக் கிராமத்தின் சின்னமாகும்.
தற்போது, இக்கிராமத்திலுள்ள பெரும்பாலான குடும்பங்களின் ஆண்கள் நகருக்குச் சென்று வேலை பார்க்கின்றனர். வீட்டில் மகளிர் குடும்ப வேலையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் முதியோரைப் பராமரிக்கின்றனர். வேளாண் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். எனி இன மகளிர் மிகவும் அயராது உழைக்கின்றனர். அவர்களும் அவர்களுடைய குழந்தைகளும் அணியும் ஆடைகள், அவர்களால் தயாரிக்கப்பட்டவை. துணி கூட அவர்களால் நெசவு செய்யப்பட்டது.
1 2 3
|