• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-07-02 16:44:47    
எனி கிராமம்

cri

எனி கிராமத்தில் ஒரு துவக்கப் பள்ளி மட்டும் உள்ளது. குழந்தைகள் 3வது வகுப்புக்குப் பின், வேறு கிராமத்துப் பள்ளியில் பயில நேரிடுகின்றது. இப்பள்ளியின் தலைவரான ஆசிரியர் சென் சியு சியென், இக்கிராமத்தில் கல்வியறிவு மிகுந்தவராவர். 20 ஆண்டுகளாக இக்கிராமத்தில் கற்பித்துவருகிறார். முன்பு, தம்முடைய மாணவர், வெளியுலகச் செய்திகளை அறிந்துகொள்ள விரும்பினர். ஆனால், தற்போது இக்கிராமத்துக்கு அதிகமான பயணிகள் வருவதால், உலகம் எப்படி என்பது பற்றி கூறுமாறு மாணவர் தம்மைக் கேட்பதில்லை என்றார் அவர்.

முன்பு, எங்கள் கிராமத்தில் சுற்றுலாத் துறையில்லை. ஆனால், சுற்றுலாத் துறையில் ஈடுபட்ட பின், கிராமத்துக்கு மின்சாரம் வந்துள்ளது. அனைத்துக் குடும்பங்களிலும் மின்சாரக் கருவிகள் உள்ளன. இவ்விடம், அரசு நிலை இயற்கைப் பாதுகாப்புப் பிரதேசமாகும். யானை, சிறுத்தை, காட்டு மாடு ஆகிய விலங்குகள் உள்ளன. தற்போது எங்கள் கிராமம், சுற்றுலாக் கிராமமாக மாறியுள்ளது என்றார் அவர்.

எனி கிராமம், நவீன மயமாக்கத்துடன், அங்குள்ள பாரம்பரிய பொருட்கள், மதிப்புள்ள பொருட்களாக மாறியுள்ளன. எடுத்துக்காட்டாக, இக்கிராமத் தலைவர் சென் தெலானின் வேட்டைக்காரர் ஆடை, பயணிகள் அணிந்து நிழற்படம் எடுக்கக்கொள்ள விரும்பும் ஆடையாக மாறியுள்ளது.

என்னைப் போல, நகரில் நீண்ட காலமாக வசித்துவருவோர், மலைக் கிராமத்துக்குச் சென்று பார்வையிட விரும்புகின்றனர் என்று எமது செய்திமுகவர் கருத்து தெரிவித்தார்.


1  2  3