நாங் சென் ச்சி அம்மையார், கடந்த 5 ஆண்டுகளில் தொழில் நிறுவனங்களின் சீர்திருத்தத்துக்காகப் போராடி வருகிறார். இதன் விளைவாக அழிவின் விளிம்பில் தத்தளித்த அரசு தொழிற்சாலை ஒன்று, புத்துயிர் பெற்றுள்ளது. அது நவீன முதலீட்டுப் பங்கு தொழில் நிறுவனமாக மாற்றி அமைக்கப்பட்டது. அன்றி, முதலீட்டுப் பங்குச் சந்தையில் சேர்ந்து 300 கோடி யூவான் மதிப்புள்ள பெரும் தொழில் நிறுவனமாகவும் மாறியுள்ளது. வடகிழக்குச் சீனாவின் சிலின் மாநிலத்தின் துமென் ஆற்றங்கரை பிரதேசத்தில் நாங் சென் ச்சி பிறந்து வாழ்ந்து வருகிறார். 1979ல் உள்ளூர் தொழில் பள்ளியில் படிப்பை முடித்த பின் 20 வயதில் ஷியென் தாள் உற்பத்தி ஆலையில் தொழிலாளியாகச் சேர்ந்தார். நவ சீனாவின் தாள் உற்பத்தி தொழில் நிறுவனங்களில் இது பழமையானது. சீனாவில், தலைசிறந்து விளங்கியது. சீனாவின் மிக முன்னேறிய தாள் உற்பத்தி தொழில் நுட்பத்தையும் சாதனங்களையும் கொண்டது. அது சீனாவின் சில பெரிய பத்திரிகைகளுக்கு தாள் விநியோகம் செய்தது. அத்துடன் பின்னர் வளர்ச்சியுற்ற தாள் உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்குப் பெருவாரியான வல்லுநர்களையும் அனுப்பியுள்ளது. கடந்த பல்லாண்டுகளாக இத்தொழில் நிறுவனம் மூலமாக, துமென் நகருக்கு நல்ல வருமானம் கிடைத்து வந்தது.
1 2 3
|