"வேலைக்களரியில் பணி புரிந்த போது வேலையிலும் இன்ன பிறவற்றிலும் நான் பெரிதும் ஈடுபட்டேன். தொழிலாளி, கம்யூனிஸ்ட் இளைஞர் லீக் கமிட்டியின் செயலாளர், தொழிற்சங்கத் தலைவர், பொது மேலாளர், தலைமை இயக்குநர் ஆகிய பதவிகளை வகித்தேன்" என்றார் அவர். இருந்தும், இவ்வாலையின் நற்காலம் நீண்டகாலம் நீடித்திருக்கவில்லை. பெரும்பாலான இதர அரசு தொழில் நிறுவனங்கள் போல், சுமை, வெளி நாட்டுத் தாள் தொழில் நிறுவனங்கள் சீன சந்தையில் நுழைந்தமை முதலியவற்றால், 90ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில், அது சங்கட நிலையை எதிர்நோக்கியது. என்னுடைய சக ஊழியர்களில் சிலர், தொழிற்சாலை திவாலாகிவிடும் என எதிர்நோக்கினர். சிலர் அரை உற்பத்தி நிலையில் உள்ள தொழிற்சாலையை எதிர்கொண்டனர். தொழிலாளர்களின் வாழ்க்கை மிகவும் சிரமமாக இருந்தது. என்னுடைய தந்தை இவ்வாலையில் பணி புரிந்தார். இவ்வாலையின் மீது எனக்குப் பிடிப்பு இருந்தது. ஆகவே, இவ்வாலையை நன்கு வளர்ச்சியுறச்செய்தால் தான், எங்கள் முன்னோடிகளை நிராசைப்படுத்த பாட்டோம் என்று தாம் கருதுவதாக அவர் கூறினார்.
1 2 3
|