தமது சக பணியாளருடன் சேர்ந்து, தாம் எதிர்நோக்கும் சங்கட நிலையைத் தொகுத்து ஆராய்ந்தார். அரசு தொழில் நிறுவனங்களுக்கான சீன அரசின் சீர்திருத்தின் துணை கொண்டு, அவர் இவ்வாலையில் துணிவுடன் சீர்திருத்தம் மேற்கொள்ள துவங்கினார். அன்றி பெரும் பணம் செலவழித்து சீனாவின் பல்வேறு இடங்களிலிருந்து இத்துறையிலான திறமைசாலிகளையும் நிர்வாகிகளையும் இவ்வாலைக்கு வரவழைத்தார். இவர்கள் எங்கள் ஆலைக்கு வந்த பின், எங்கள் நிர்வாகப் பணியில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. முன்பு எங்கள் ஆலையில் பொருட்கள் அடிக்கடி காணாமல் போயின. நீர் மற்றும் மின்சாரம் பெரிதும் விரயப்பட்டன. இதை நிர்வகிப்பதற்கு ஆள் இல்லை. ஆனால், சொத்துடைமை சீர்திருத்தத்துக்குப் பின் நிலைமை மாறியது. உற்பத்திச் செலவைப் பொறுத்து, ஒரு டன் தாளூக்கு 500 யூவானைக் குறைவாகச் செலவழித்தோம். எங்கள் ஆலை, ஆண்டுக்கு 2 லட்சம் டன் தாள் உற்பத்தி செய்கிறது. அதனால், அது 10 கோடி யூவான் செலவு குறைக்கப்பட்டது என்றார் அவர். இப்போது, போட்டி மூலம் ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையைக் கையாள்கிறோம். தொழிலாளர்களின் பொறுப்புணர்ச்சி இதனால் வலுப்பட்டுள்ளது. தொழில் நிறுவனம் மேலும் விரைவாக வளர்ச்சியுறுகிறது. கடந்த ஆண்டு எங்கள் ஆலை வெற்றிகரமாக முதலீட்டுப் பங்கு சந்தையில் நுழைந்துள்ளது என்று அவர் கூறினார். தற்போது இவ்வாலையில் மூவாயிரம் தொழிலாளர்களும் ஊழியர்களும் உள்ளனர். ஷாங்காய் பெய்ஜிங் ஆகிய மாநகரங்களில் கிளைகள் அதற்குண்டு. 1 2 3
|