
1985ல் கிராமப்புறங்களில் விவசாய உற்பத்தியில் குடும்ப ஒப்பந்த பொறுப்பு முறையை சீன அரசு நடைமுறைப்படுத்தியது. அப்போது அவர் தமது அனைத்து சேமிப்பு மற்றும் கூட்டுறவு வங்கியிலிருந்து வாங்கிய கடனை கொண்டு, சுமார் 18 ஹெக்டர் தரிசு நிலத்துக்குப் பொறுப்பேற்றார். அவரும் அவரது மனைவியும் இரவு பகல் பாராமல் அயராதுழைத்து வந்தனர். இயந்திர கிணற்றைத் தோண்டியெடுத்து இத்தரிசு நிலத்துக்கு நீர்ப்பாய்ச்சி பின்னர் இதில் திராட்சை கொடி பயிரிடலாயினர். இன்று அவருடைய தோட்டத்தில், ஆடுமாடுகளின் மேய்ச்சல் நிலம், பழங்கள் நிறைந்த திராட்சைத் தோட்டம், திராட்சைக் குலைகளை காய வைக்கும் அறை, சிறப்பான உய்கூர் இன பாணியில் அமைக்கப்பட்ட ஓய்வில்லம் ஆகியவை தூரத்திலுள்ள செக்கச் சிவந்த Huo Yan மலையுடன் பின்னிப்பிணைந்து, பூவுலகின் தேவலோகம் போல் காட்சி தருகின்றது. திராட்சை தோட்டத்தில் Simayi Kurban பணியில் ஈடுப்பட்டிருப்பதைக் காணமுடிந்தது. வயதானவர் என்றாலும், இன்னமும் திடகாத்திரத்துடன் அவர் காணப்படுகிறார்.
1 2 3
|