• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-07-09 19:10:56    
Huo Yan மலை அடிவாரத்தில் வாழும் Kurban

cri

அப்போது இங்கு தரிசு நிலத்துக்கு பொறுப்பேற்க எவரும் முன் வரவில்லை. நான் பயிரிட்ட தரிசு நிலத்தில் திராட்சை கொடி நட்டு பணம் ஈட்டுவதைக் கண்ட பின் அவர்கள் என்னைப் பின்பற்றலாயினர். இப்போது நாங்கள் பல்லாயிரம் மு தரிசு நிலத்தில் திராட்சை நட்டுள்ளோம். பலர் முதலாளிகளாக மாறியுள்ளனர். ஆண்டுதோறும் திராட்சை பயிரிடுவதன் மூலம் எனக்கு கிடைத்த வருமானம் சராசரி 6,7 லட்சம் யுவானாகும். கடந்த இரண்டு ஆண்டுகளில் அது 12 லட்சம் யுவானாகும் என்று தமது திராட்சைத் தோட்டம் பற்றி அவர் கூறினார்.
Kurban திராட்சைத் தோட்டம் அதிக விளைச்சல் தருவதுடன் அதன் இனமும் சிறந்து விளங்குகிறது. அவர் திராட்சை பயிரிடும் நுட்பமும் முழு துருபான் பிரதேசத்திலும் தலைசிறந்தது. துருபான் பிரதேசத்தின் அறிவியல் ஆய்வு கூடத்து நிபுணர்களும் கூட அடிக்கடி அவருடைய தோட்டத்துக்கு வந்து அவருடன் அலசி ஆராய்கின்றனர். அவருடைய புகழ் பரவிவருகிறது. சில ஜப்பானிய கூட்டு நிறுவனங்கள் திராட்சை கொள்வனவு செய்ய அவருடைய வீட்டுக்கு வருகை தந்தன. 1988ல் பெய்ஜிங் மற்றும் தைவான் செய்திமுகவர் சிலர் இங்கு வந்து தரிசு நிலமாகவிருந்த இவ்தப் பழத்தோட்டக் கண்டு வியப்படைந்தனர். அவரது திராட்சை மன்னர் என அழைக்கலாயினர். அன்று முதல் இந்தப் புனை பெயர் அவருடன் ஒட்டிக் கொண்டது.


1  2  3