உயிரின வாழ்க்கை சூழலை மீட்பதானது, Talimu ஆற்றுக் கட்டுப்பாட்டின் அடிப்படை நோக்கமாகும். நீண்டகாலமாக, காட்டை அழித்தொழித்து, விளை நிலத்தை வளர்ச்சியுறச்செய்துள்ளதால், இரு கரைகளின் உயிரின வாழ்க்கை சூழல், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இக்கட்டுப்பாடு, Talimu ஆற்றின் முக்கிய பகுதியிலுள்ள சுமார் 20 ஆயிரம் ஹெக்டர் விளை நிலத்தில், மீண்டும் மரம் நடவழி வகுத்துள்ளது. அத்துடன், நடுப்பகுதி மற்றும் கீழ் பகுதியில் சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் ஹெக்டர் பாலையின் காட்டையும் புல்லையும் பேணிக்காக்க வேண்டும்.
Talimu ஆற்றுப்பள்ளத்தாக்கில் அமைந்துள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டர் நெட்டிலிங்க மரக்காடு, உலகில் மிகப் பெரிய இத்தகைய இயற்கை காடாகும். இது, இப்பிரதேசத்து மனித குலத்தின் வாழ்க்கைக்கு வாக்குறுத்தியை அளிப்பதுடன், ஆசிய காட்டுக் கழுதை, மான் உள்ளிட்ட பல விலங்குகள் வசிக்கும் சிறந்த இடமாகவும் இருக்கிறது.
1 2 3
|