
Talimu ஆற்றுக் கட்டுப்பாட்டில், சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைக்க சீனா விரும்புவதாக, இவ்வாற்றின் ஆற்றுப்பள்ளத்தாக்கு நிர்வாக அலுவலகத்தின் துணைத் தலைவர் Wang Jian Zhong தெரிவித்தார். இது பற்றி, சீனாவும் ஜெர்மனியும், அண்மையில் சின்சியாங்கில் கலந்தாய்வு கூட்டத்தை நடத்தியுள்ளன.
Talimu ஆறு, உயிரின வாழ்க்கை ஆறாகும். தற்போது, ஆற்றின் கட்டுப்பாடு தொடர்பாக எங்களுக்கு அனுபவமில்லை. உள் நாட்டு வெளிநாட்டு அனுபவத்தை பயன்படுத்தி, வெளிநாட்டில் பார்வையிட்டு, சர்வதேச நிறுவனங்களுடன் தொடர்பை நிறுவவுள்ளோம். வெளிநாட்டு முன்னணி அனுபவத்தை பயன்படுத்துவதன் மூலம், Talimu ஆற்றுக் கட்டுப்பாடு மேலும் அறிவியல்மயமாக வேண்டும் என்று, விரும்புகின்றோம் என, Wang Jian Zhong கூறினார். 1 2 3
|