இக்காட்டை மீட்டு, பேணிக்காப்பதோடு, உயிரின வாழ்க்கை சூழலின் கட்டுமானத்துக்கும், மக்களின் உற்பத்தி வாழ்க்கைக்குமிடையிலான உறவை, உரிய முறையில் கையாள வேண்டும் என்று, ஆய்வாளர் Xia Xun Cheng சுட்டிக்காட்டினார்.
உயிரின வாழ்க்கை சூழலின் கட்டுப்பாடும் புனரமைப்பும், இப்பிரதேசத்தின் பிராந்திய திறப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இசைவாக இருந்திட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
பழைய பட்டுப் பாதையின் முக்கிய பகுதியான Talimu ஆற்றுப்பள்ளத்தாக்கில், பல புகழ்பெற்ற வரலாற்று சிறப்பிடங்கள் உண்டு. LOU-LAN எனும் பழைய நகரம் முதலியவை, தனிச்சிறப்பு வாய்ந்த இடமாகும். இதனால், இங்கு, சுற்றுலாவை வளர்ச்சியுறச்செய்வது என்பது, மக்களின் பொருளாதார வருமானத்தை அதிகரித்து, அவர்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதுடன், உயிரின வாழ்க்கை சூழலின் கட்டுமானத்துக்கும் பாதுகாப்புக்கும் துணைபுரிகிறது என்று, Xia Xun Cheng கருத்து தெரிவித்தார்.
1 2 3
|