 அன்றி, நூற்றுக்கணக்கான ஆடுமாடுகளையும் சுமார் ஆயிரம் புறாக்களையும் Kurban வளர்ந்து வருகிறார். சிறிய ரகப் பதனீட்டு ஆலைகளையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் அவருக்கு ஆண்டுதோறும் ஏறக்குறைய ஒரு லட்சம் யூவான் வருமானம் கிடைக்கிறது. அவருடைய தொழில் அளவு பெருகி வருவதுடன் அவர் மேன்மேலும் பரபரப்பாக பணிபுரிகிறார். 90 ஆண்டுகளில் துவக்கக்காலத்தில் சிங்சியாங், கான் சு, சான் சி, நின் சியா உள்ளிட்ட பல இடங்களிலிருந்து 40 விவசாய தொழிலாளர்களை திராட்சை பயிரிடும் பணியில் அமர்த்தினார். ஆண்டு துவக்கத்தில் அவர் இருந்த தொழிலாளர்களுடன் பணி ஒப்பந்தம் உருவாக்குவார். முன்னதாக 40 விழுக்காட்டு ஊதியம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும். எஞ்சிய 60 விழுக்காடு, திராட்சை விற்கப்பட்ட பின் வழங்கப்படும்.
எமது எஜநானர் எங்களை தம் பிள்ளைகள் போல் நடத்துகிறார். எங்கள் குடும்பம் இன்னல்படும் போது, அவர் உதவுகிறார். 1997ல் சுச்சுவான் மாநிலத்திலுள்ள என் வீடு தீப்பற்றிக்கொண்டது. நான் திரும்புவதற்குள் அவர் என் வீட்டுக்குப் பணம் அனுப்பினார். உடனடியாக புதிய வீடு கட்டப்பட்டது. எஜமானரை நான் நம்புகிறேன். அவரும் எங்களை அன்பாக நடத்துகிறார். எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்றாலும் இங்கு ஒப்பந்தமும் நடத்துகைகளும் ஒரே மாதிரியாக உள்ளன என்று சுச்சுவான் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி Yan Ming Hai கூறினார்.
1 2 3
|