
இன்று குர்பான் பல பத்து லட்சத்துக்கு அதிபதியாவார். ஆனாலும் அவர் இன்னும் மனநிறைவு அடையவில்லை. ஒவ்வொரு குடும்பமும் திராட்சை கொடி பயிரிடும் அளவிலும் தனித் துவத்திலும் சிறந்த விளங்க வேண்டும் என்று அவர் கருதுகிறார். அவர் ஒரு திறமை மிக்கவர். தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான உருமுச்சியில் ஸ்மாயி குர்பான் திராட்சை மன்னர் எனும் கூட்டு நிறுவனத்தை அவர் நடத்துகிறார். லான்சோ வணிக கல்லூரியில் படிப்பை முடித்த அவருடைய இளையமகன் யுசுபு இதன் தலைமை மேலாளராகப் பணியாற்றுகிறார்.
இக்கூட்டு நிறுவனம் எங்கள் குடும்பம் பயிரிட்ட உலர் திராட்சையை விற்பனை செய்கிறது. அன்றி சிங்சியாங்கின் பல்வேறு இடங்களில் விளையும் உலர்ந்த திராட்சை, பஞ்சு, தேயிலை உள்ளிட்ட வேளாண் ஆக்கப்பொருட்களையும் கொள்வனவு செய்கின்றது. லியன்முசின் மாவட்டத்தில் அதிக முழுவதிலும் திராட்சை விளைகிறது. ஆகவே சில சமயங்களில் நாங்கள் மற்றவர் பயிரிட்ட திராட்சைகளைப் பதனீடு செய்கிறோம். இப்போது சிராட்சை பயிரிடுவோர் எண்ணிக்கை அதிகம். எனவே சிறந்த விற்பனை முறையின் மூலம் தான், எங்கள் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்று குர்பான் கூறினார். 1 2 3
|