• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-07-23 20:51:49    
முலான்பே நீர் சேமிப்புத் திட்டப்பணி

cri
முலாந்பே நீர் சேமிப்புப் திட்டப்பணி சீனாவின் மிகப் பழைய நீர் சேமிப்புத் திட்டப்பணியாகும். புதியன் நகரின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இது மிக முக்கிய பங்கினை ஆற்றிவருகின்றது.
பூச்சியன் மாநிலத்தின் தேஹுவா மாவட்டத்தில் முலான்சி ஆறு தோன்றியது. அதன் முழு நீளம் 168 கிலோமீட்டராகும். புதியன் நகரின் ஊடாக, 105 கிலோமீட்டர் தூரம் ஓடுகிறது. சிங்குவா சமவெளி, இதனால் நன்யாங் பெய்யாங் எனும் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. புதியன் புற நகரில் அமைந்துள்ள முலான் மலை அடிவாரத்தில் இந்த நீர் சேமிப்பு திட்டப்பணி அமைந்துள்ளது. அதன் நீளம் சுமார் 200 மீட்டர், உயரம் 8 மீட்டர், அதில் 32 மதகுகள் காணப்படுகின்றன. அது, மேல் பகுதியிலிருந்து வரும் நீரை இடைமறித்தும், கீழே பாய்ந்துவரும் கடல் அலையைத் தடுத்தும் வருகின்றது. இந்த நீர் சேமிப்புத் திட்டப்பணி நிர்வாகப்பகுதியின் துணைத் தலைவர் ஹுவாங் சின் சி வருமாறு கூறுகின்றார். முலான்பே நீர் சேமிப்புத் திட்டப்பணி நிறைவேற்றப்பட்டு இன்றுவரை 1000 ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளது.
1  2  3