அது, பயன்பாட்டுக்கு வந்து 970 ஆண்டுகளாகிவிட்டது. சீனாவின் பழைய நீர் சேமிப்புத் திட்டப்பணிகளில் இதுவே நீண்ட வரலாறுடையது. வடிகால் வேலை, நீர்சேமிப்பு, நீர்ப்பாசனம் எனப் பல நிலைகளில் இது பயன்படுகின்றது. அத்துடன், தொழிற்துறை பயன்பாட்டு நீரைச் சேமிப்பது, கப்பல் போக்குவரத்து, நீர் வாழ்வன வளர்ப்பு முதலிய பன்நோக்க நலன்களையும் இது வழங்கியுள்ளது என்றார் அவர்.
பழமை வாய்ந்த இந்த நீர் சேமிப்புத் திட்டப்பணியானது, பண்டைக்கால சீன உழைப்பாளியர்தம் மக்களின் விவேகத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதன் இரு முனைகளுக்கும் தலா ஒரு மதகு காணப்படுகின்றது. நன்யாங் மற்றும் பெய்யாங் சமவெளிகளிலுள்ள, 120 கிலோமீட்டர் நீள கால்வாய்களில் நீர்பாய்கின்றது. இதனால், ஒரு லட்சத்து 50 ஆயிரம் மு பரப்பளவு நீர்ப்பாசனம் பெறுகின்றது. இந்த ஆறு, புதியன் நகரிலும் கிராமப்புறங்களிலும் ஹன்சியாங்கின் இரு மண்டலங்களிலும் வாழும் 4 லட்சத்து 50 ஆயிரம் மக்களை ஊட்டி வளர்க்கின்றது. 1 2 3
|