வெள்ளப் பெருக்கின் போது, நீரை உரிய நேரத்தில் கடலில் கலக்கச் செய்கின்றது. கடல் அலை வரும் போது, அதைத் தடுக்கின்றது. மக்களின் குடிநீர் தேவையை அது உத்தரவாதம் செய்கின்றது. பண்டைக்காலத்தில், அது, முக்கிய நீர் வழிப் போக்குவரத்துப் பாதையாக விளங்கியது. விடுதலைக்குப் பின், நன்யாங் மற்றும் பெய்யாங் சமவெளிகளின் நன்னீர் வாழ்வன வளர்ப்பு, தொழிற்துறைப் பயன்பாட்டு நீர் ஆகியவற்றின் ஊற்றுமூலமாக, அது விளங்கிவருகின்றது. புதியன் மக்கள், தமக்குப் பேருதவி புரிந்துவரும் முலான்பே நீர்சேமிப்புத் திட்டப்பணியை என்றும் நினைவில் நிறுத்திவைப்பர்.
இந்தத் திட்டப்பணி தொடர்பாகச் சில கதைகள் வழங்குகின்றன. இத் திட்டப்பணியின் நிர்வாகத்தின் பொறுப்பாளர் பொங் லின்குய் வருமாறு கூறினார்.
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், முலான்சி ஆற்றின் இரு கரைகளிலும் அடிக்கடி வெள்ளம் ஏற்பட்டது, இதனால், மக்கள் இன்னலுக்கு ஆளாயினர். சொந்த ஊரை விட்டு வெளியேறுவது, குழந்தைகளை விற்பது என்பன அரிதல்ல. சாங்லோ எனும் இடத்தில் வசித்த சியன் சுனியங் எனும் பெண்மணி தந்தைக்கு ஈமச்சடங்கு ஏற்பாடு செய்ய, புதியன் வழியாகச் சென்ற போது, அங்குள்ள மக்களின் துன்பத்தைக் கண்டு வருந்தினார். 1 2 3
|