
தாம் வளமடைந்த போது, தம் ஊர் மக்களை குர்பான் மறந்துவிடவில்லை. திராட்சை பயிரிடுவதில் தாம் பெற்ற நுட்பத்தையும் அனுபவத்தையும் இலவசமாக அவர் சொல்லித்தருகிறார். அனைவரும் வளமடையும் பாதையில் செல்வதற்கு உதவி புரிகிறார்.
1995ல் அவர் 4 லட்சம் யுவான் முதலீடு செய்து தமது ஊரில் ஒரு இடைநிலைப் பள்ளியைத் துவங்கியுள்ளார். இதன் விளைவாக இக்கிராமத்திலுள்ள குழந்தைகள் அனைவரும் பள்ளிக்குச் செல்ல முடிந்தது. முன்பு இங்குள்ள குழந்தைகள் கல்வி பயில குறைந்தது 7,8 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிநேரிட்டது. வறுமை தூரம் ஆகியவற்றின் காரணத்தால் மாணவர் பலர் இடைநிலை பள்ளி படிப்பு வாய்ப்பை நழுவிவிட்டனர்.
1 2 3
|