
கடந்த 8 ஆண்டுகளாக பள்ளியின் மீது அவர் பெரிதும் கவனம் செலுத்தி வருகிறார். அடிக்கடி பள்ளிக்கு பொருட்களையும் பணத்தையும் பள்ளிக்கூடத்துக்கு நன்கொடையாக வழங்குகிறார். ஆசிரியர் விழா மற்றும் குழங்தை விழாவின் போதெல்லாம் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அவர் பல்லாயிரம் யூவான் வழங்கி விழா வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார். குளிர்காலத்தில் வெப்ப வாயு குழாய் வசதி இல்லாத பள்ளிக் கூடங்களுக்கு நிலக்கரியை அவர் வாங்கி தருவார்.
போக்குவரத்து வசதி இல்லாத போது, அவர் தாமாகவே கார் ஓடி பொருட்களை வாங்க மாணவர்களை அழைத்துச்செல்வார். 2001ல் அவர் ஒரு லட்சம் யூவான் முதலீடு செய்து, கூடைப்பந்தாட்ட களரியைக் கட்டியமைத்தார். இதன் விளைவாக மாணவர்களுக்கு ஒழுங்கான விளையாட்டுகளரி கிடைத்துள்ளது.
ஓங்கி வளரும் தமது திராட்சை தோட்டத்தை பார்த்தும், மாணவர்களின் பாடம் படிக்கும் குரலைக் கேட்டும் இந்தத் திராட்சை மன்னர், மன நிறைவு அடைகிறார். எதிர்காலத்தில் திராட்சையும் இங்குள்ள மக்களின் வாழ்க்கையும் மேலும் சிறந்து விளங்கும் எனது எங்களிடம் கூறினார் குர்பான். 1 2 3
|