வடமேற்கு YAN ANனிலுள்ள WU QI மாவட்டம், இத்திட்டப்பணியில் சிறப்பிடம் பெறுகிறது. கடந்த காலத்தில், உள்ளூர் மக்கள், பாரம்பரிய வேளாண் துறை உற்பத்தி வழிமுறையை சார்ந்திருந்தனர். இதன் விளைவாக, பொருளாதாரம் மேன்மேலும் பின்தங்கியிருந்தது என, இம்மாவட்டத்தின் தலைவர் XUE ZHANHAI கூறினார். அவர் குறிப்பிட்டதாவது:
1980ம் ஆண்டுகளின் துவக்கம் வரை, முழு மாவட்டத்தின் உண்மை விளை நிலப்பரப்பு, சுமார் 1.3 ஹெக்டராகும். ஆட்டை முக்கியமாக கொண்ட கால்நடை துறை, இயற்கை புல்வெளியின் ஆற்றலை கடுமையாக தாண்டியுள்ளது. இந்த வகை உற்பத்தி வழிமுறையால், உயிரின வாழ்க்கை நாளுக்கு நாள் மோசமாகவும், பொருளாதாரம் நீண்டகாலமாக பின்தங்கியும் இருந்ததாக, XUE ZHANHAI கூறினார்.
1 2 3
|