
கடந்த 5 ஆண்டுகளில், விளைநிலத்தை மீண்டும் காடாக மாற்றுவதை முக்கியமாக கொண்ட உயிரின வாழ்க்கை சூழல் கட்டுமானத்தைப் பயன்படுத்தி, வேளாண் துறை மற்றும் கிராமப்பணியின் முழு நிலைமையை முன்னேற்றுவிப்பதில் ஊன்றிநிற்கின்றோம். இயற்கை வனப் பாதுகாப்பு, பொருளாதார காடு, நீர் சேகரிப்பு முதலிய ஆறு திட்டப்பணிகளை முக்கிய உள்ளடக்கமாக கொண்ட கட்டுமானத்தை நடைமுறைப்படுத்தியதால், கிராமத்தில் ஆழ்ந்த மாற்றம் காணப்பட்டுள்ளது என்றார் அவர்.
உயிரின வாழ்க்கை சூழல் கட்டுமானம் இடைவிடாமல் முன்னேற்றுவிக்கப்படுவதுடன், இயற்கை நாசமடையாமல் விவசாயிகளின் வருமானத்தில் ஏற்பட்ட பாதிப்புக் குறைந்துள்ளது. 2002ம் ஆண்டில், YAN AN விவசாயிகளின் ஆண்டு நபர்வாரி வருமானம், 1500 ரென்மின்பி யுவானை எட்டியுள்ளது. வறுமை பிரச்சினையைத் தீர்ப்பதிலிருந்து, ஓரளவு வசதியான சமூகத்தை நிறுவுவது என்பது, அடிப்படையில் நனவாகியுள்ளது. 1 2 3
|