 சீனாவின் புக்கியன் மாநிலத்தின் தென்கிழக்கு கடலோரப் பகுதியில் புதியென் நகர் அமைந்துள்ளது. அதன் வடக்கில் மாநில தலைநகரான புச்சோ, தெற்கில் சுவான் சோ, சியா மன் ஆகிய நகரங்கள் உள்ளன. அதற்கு எதிரே சீனாவின் செல்வ தீவான தைவான் உள்ளது. புதியென்னிலிருந்து புச்சோ சர்வதேச விமான நிலையத்துக்குச் செல்ல ஒரு மணி நேரம் தேவைப்படுகிறது. சியா மன் விமான நிலையத்துக்குச் சென்றால் 2 மணி நேரம் செலவழிக்க வேண்டும். உயர் வேக நெடுஞ்சாலை இந்நகரத்துக்கூடாகச் செல்கின்றது. இந்நகரம் ஈடிணையற்ற மனிதப்பண்பாட்டு மற்றும் நிலவமைப்பைக் கொண்டிருக்கின்றது.
மெச்சோ விரிகுடா எழில் மிக்கது. இங்கு காலநிலை சிறப்பானது. அதன் கடற்கரை 120 கிலோமீட்டர் நீளமுடையது. இங்கு பெரிய ரக ஆழ் நீர் தங்கும் துறைகளைக் கட்டியமைக்க முடியும். மெச்சோ விரிகுடாவிலுள்ள மெச்சோ தீவுக்கும் தைவான் மாநிலத்தின் தைச்சொங் நகருக்குமிடையிலான தூரம், 72 கடல் மைல் மட்டுமே. இங்கு துறைமுகம் கட்டியமைத்தால் இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்குப் பொருட்களை ஏற்றிச்செல்ல முடியும் என்று புதியென் நகர கட்சிக் கமிட்டி செயலாளர் யுவான் ச்சின் குய் கூறினார்.
1 2 3
|