
புதியென் நகரைச் சேர்ந்த வல்லுநர் சீனாவின் பல்வேறு இடங்களில் பரவிக்கிடக்கின்றனர். இந்நகரில் மக்கள் தொகை அதிகம். நிலப்பரப்பு குறைவு. எனவே இங்குள்ள மக்கள் அயராதுழைக்கின்றனர். புத்திக்கூர்மை மிக்கவர் என்பதால், அவர்கள் புக்கியன் மாநிலத்தின் யூதர் என அழைக்கப்படுகின்றனர்.
வெளியூர்களிலுள்ள பல்வகைச் சிறப்புத் துறை தொழில் நுட்ப வல்லுநர்களும் பேராசிரியர்களுமாக மொத்தம் 5000க்கு மேற்பட்டோர் இந்நகரைச் சேர்ந்தவர்களாவர். 11 பேர் சீன அறிவியல் கழகம் மற்றும் சீன பொறியியல் கழகத்தின் உறுப்பினர்களாவர் (மூத்த அறிஞர்களாவர்). இந்நகரின் புதியென் கல்லூரியில் 8000 மாணவர் கல்வி பயில்கின்றனர். 2003ல் மட்டும் 2000 மாணவர் சேர்க்கப்பட்டுள்ளனர். சீனாவில் பல்வேறு இடங்களில் 5 லட்சத்துக்கும் அதிகமான புதியென் மக்கள் தொழில் நடத்துகின்றனர். மொத்த கையிருப்பு மதிப்பு மூவாயிரம் கோடி யூவானாகும். 50 லட்சம் யூவான் கையிருப்பு கொண்ட தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 3000ஐத் தாண்டியுள்ளது. இவற்றில் சுமார் 30 தொழில் நிறுவனங்கள் 10 கோடி யூவான் சொத்துகளைக் கொண்டிருக்கின்றன.
1 2 3
|