• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-08-03 19:03:31    
புதியென் நகரம்

cri

சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை இந்நகரின் வளர்ச்சிக்குப் புதிய உயிராற்றலை ஊட்டியுள்ளது. இதனால் இந்நகரின் பொருளாதாரம் விரைவாக வளர்ச்சியுறுகின்றது. நகரக் கட்டுமானம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்கிறது. மக்களின் வாழ்க்கைத் தரம் இடைவிடாமல் உயர்ந்து வருகிறது.

நாங்கள் பெரும் சாதனை சாதித்துள்ளோம். கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் புதியென் நகரின் வளர்ச்சி வெகு விரைவானது. மொத்த உள் நாட்டு உற்பத்தி மதிப்பு 2320 கோடி யூவானை எட்டியுள்ளது. 2002ல் அதன் மொத்த நிதி வருமானம் 180 கோடியே 3400 யூவானாகும். இது 1983ஆம் ஆண்டை விட 42 மடங்கு அதிகரித்துள்ளது. சராசரியாக நகரவாசிகள் செலவழிக்கக்கூடிய வருமானம் 8326 யூவானாகும். இது 1983ஆம் ஆண்டைக் காட்டிலும் 17 மடங்கு அதிகரித்தது. விவசாயிகளின் நபர்வாரி வருமானம் 3561 யூவானை எட்டியுள்ளது. இது 1983ஆம் ஆண்டை விட 13 மடங்கு கூடுதலாகும்.

சீனாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள புதியென் நகரில் காலநிலை சிறப்பாக உள்ளது. இங்குள்ள மலைப்பிரதேசம் பயிர் வளர்ப்பு மற்றும் நீர் வாழ்வன வளர்ப்புத் தொழிலில் ஈடுபடத் தகுந்தது. குறிப்பாக பழ வகைகளைப் பயிரிடுவதற்கு ஏற்றது.


1  2  3