• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-08-04 16:04:56    
புதியேன் நகரம் 2

cri

புதியெனில் விளையும் லொக்காத், வென்தான் கொடி முந்திரி, லீச்சி, லொங்கன் ஆகிய 4 பழவகைகள் சீனாவிலும் தென்கிழக்காசிய நாடுகளிலும் புகழ் பெற்றவை. லொங்கன், லீச்சி பழங்கள் இங்கு ஆயிரமாண்டுகளாக பயிரிடப்பட்டு வருகின்றன. பண்டைக்கால சீனாவில் லீச்சி பழம் அரண்மனைக்கு கப்பமாக செலுத்தப்பட்ட பழமாகும். தாங் வமிச ஆட்சிக்காலப் பேரரசரின் செல்ல காமக்கிழத்தி யாங், புதியென் லீச்சி பழத்தை பெரிதும் விரும்பினார். பண்டைக்காலத்தில் சின்குவா என அழைக்கப்பட்ட இந்நகர் லொங்கன், உலர் லொங்கன் அக்காலத்திலிருந்தே சீனாவின் பல்வேறு இடங்களிலும் புகழ்பெற்று விளங்குகின்றன. சீனாவின் பெரும் சந்தையில் விற்பனையாகும் சின்குவா உலர் லொங்கன் இந்நகரில் தான் விளைகின்றது.

அன்றி, இந்நகரின் ஹான் சியாங் வட்டத்தில் வளர்க்கப்படும் விலாங்கு மீன், ஜப்பான் அமெரிக்கா நெதர்லாந்து ஆகிய நாடுகளிலும் ஹாங்காங் பிரதேசத்திலும் புகழ்பெற்று விளங்குகிறது. உயிருள்ள விலாங்கு மீனின் ஏற்றுமதி மதிப்பு புக்கியன் மாநிலத்தில் முதலிடம் வகிக்கின்றது.

தவிர, புதியென் காலணி உற்பத்தி, ஆடைகள், உணவுப் பொருள் மின்சார இயந்திரத் தொழில் துறை ஆகியவையும் ஓரளவு வளர்ச்சியடைந்துள்ளன. மின்னணு தகவல், உயிரின மருந்தாக்கத் தொழில் போன்ற புதிய தொழிற்துறைகளும் இந்நகரின் வளர்ச்சியில் பங்காற்றி வருகின்றன என்று புதியென் நகர் வேளாண் அறிவியல் ஆய்வு மையத்தின் தலைவர் பெங் சியன் பிங் கூறினார்.

1  2  3