
நீர் வாழ்வன வளர்ப்புத் துறையில் புதியென் மேம்பாட்டைக் கொண்டுள்ளதோடு, தென்கிழக்காசிய நாடுகளில் இந்நகர் புகழ்பெறுவதற்கு மெச்சோ தீவின் மாச்சு வழிபாட்டு பண்பாடும் மற்றொரு முக்கிய காரணமாகும்.
பாச்சு தேவதை மீது புதியென் மக்கள் நம்பிக்கை கொள்கின்றனர். உலகில் ஏறக்குறைய 20 கோடி மக்கள் அதன் மீது நம்பிக்கை கொள்கின்றனர். தைவானிலான மாச்சு தேவதை கோயில்களின் எண்ணிக்கை சுமார் 5000 ஆகும். அங்கு ஒரு கோடியே 40 லட்சம் மத நம்பிக்கையாளர் உள்ளனர். மாச்சு தேவதையின் பொற்சிலை பல இடங்களுக்கு வலம் வந்த மத நம்பிக்கையாளர்களுக்கு ஆற்றலை வழங்கியுள்ளது. மாச்சு வழிபாட்டுப் பண்பாட்டைத் தொடர்ந்து போற்றி வருவது என்பது தைவான் நீரிணையின் இரு கரைகளிலுள்ள உடன்பிறப்புகளின் சகோதர உணர்வை அதிகரித்துள்ளது. நீரிணையின் இரு கரைகளிலும் விமான மற்றும் கப்பல் போக்குவரத்து, அஞ்சல் போக்குவரத்து, வர்த்தகம் ஆகியவை கூடிய விரைவில் நனவாகுவதற்கு அது துணை புரியும் என்று மாச்சு வழிபாட்டுப் பண்பாட்டுச் சங்கத்தின் கெளரவ நிர்வாக இயக்குநர் சியெ சின் யென் கூறினார்.
1 2 3
|