2000ஆம் ஆண்டு வசந்தகாலத்தில், சீனாவின் வடபகுதியில் முன் கண்டிராத மணற்காற்று, வீசியது. கடுமையாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பெய்ஜிங் ஒன்றாகும். மணற்காற்று, மக்களின் இயல்பான வாழ்க்கையைப் பாதித்துள்ளது. சுற்றுச்சூழல் தூய்மை கேட்டுக்குள்ளாயிற்று. இப்பிரச்சினையானது, சீன அரசின் பெரும் கவனத்தை ஈர்த்தது. பின்னர், 5600 கோடி யுவான் முதவீடு செய்து, 2010ஆம் ஆண்டுக்குள், உள்மங்கோலியா, ஹோபெய் முதலிய இடங்களில், பெய்ஜிங்-தியென்ஜின் மணற்காற்றுக் கட்டுப்பாட்டுத் திட்டப்பணியைப் பெருமளவில் நடைமுறைப்படுத்த சீன அரசு திட்டமிட்டுள்ளது. 4 லட்சம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் கட்டுப்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மாவ் வூ சூ
கு பூ சி
உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தில் அமைந்துள்ள மாவ் வூ சூ மற்றும் கு பூ சி பாலைவனங்கள், சீனாவின் வடபகுதியின், குறிப்பாக பெய்ஜிங், தியென்ஜின் பிரதேசங்களில் முக்கிய மணற்காற்று வீசுவதற்குத் தோற்ற மூலமாகும். சாங் சியா கோவ் நகர் வழியாக, மணற்காற்று பெய்ஜிங்-தியென்ஜின் பிரதேசத்தில் நுழைகிறது. ஆகவே, பெய்ஜிங் மாநகருக்கு வடமேற்கில் அமைந்துள்ள சாங் ஜியா கோவ் நகர், இக்கட்டுப்பாட்டுத் திட்டத்தில் முக்கிய இடம் பெறுகிறது.
1 2 3
|