3 ஆண்டு கட்டுமானத்தின் மூலம், சாங் சியா கோவ் பிரதேசத்தில், காடு மற்றும் புல் வளர்ப்பு பரப்பளவு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. இந்நகரின் வனத்தொழில் அலுவலகத்தின் துணைத் தலைவர் காங் சேங் பூ கூறியதாவது—
"காடு மற்றும் புல் வளர்ப்பு பரப்பளவு, பயன் தரும் முறையில் அதிகரித்துள்ளது. திட்டப்பணி பிரதேசத்தில் இப்பரப்பளவு, 70 விழுக்காடாக உயர்ந்துள்ளது. நிலத்துக்கான பாதுகாப்பு, குறிப்பாக நீர் மற்றும் மண் அரிப்பு, மண் பாலைவனமயமாக்கம் ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டுக்கு இது நேரடி பயன் தருகிறது" என்றார் அவர்.
பெய்ஜிங்-தியென்ஜின் மணற்காற்றின் தோற்ற மூலத்துக்கான கட்டுப்பாட்டுத் திட்டப்பணியானது, சாங் சியா கோ பிரதேசத்தில் காலநிலையும் பெய்ஜிங் பிரதேசத்தில் உயிரின வாழ்க்கைச் சூழலையும் மேம்படுத்தியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில், சாங் சியா கோ நகரில், மணல்காற்று வீசுவது குறைந்துள்ளது. வசந்தகாலத்தில் பெய்ஜிங்கில் மணற்காற்று வீசுவதற்கான காலநிலை குறைவு.
1 2 3
|