நடைமுறைக்கு வந்த இத்திட்டப்பணி, காடு வளர்ப்பு மற்றும் பசுமை மயமாக்கம் மூலம் சூழ் நிலையை மேம்படுத்தும் எடுத்துக்காட்டுகளில் ஒன்று. காடு வளர்ப்பு இயக்கம், சீனாவில் 1970ஆம் ஆண்டுகளின் இறுதியிலேயே பெருமளவில் துவங்கி விட்டது. சீனாவின் வடகிழக்கு, வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் அமைந்துள்ள செயற்கை வனப் பாதுகாப்பு நாடா திட்டப்பணியின் முறைமை, அதாவது சீனாவில் அடிக்கடி குறிப்பிட்ட மூன்று வடபகுதிகளிலான வனப் பாதுகாப்பு நாடா திட்டப்பணியானது, இயக்கத்தில் மிகவும் புகழ்பெற்றது. சீனாவின் சில முக்கிய பாலைவனங்கள் இத்திட்டப்பணியில் உள்ளன. ஆகவே இங்கே இயற்கைச் சூழ்நிலை மோசமாகும். இவ்வனப் பாதுகாப்பு நாடா திட்டப்பணியின் பயன் பற்றிக் குறிப்பிடுகையில், சீனத் தேசிய வனத்தொழில் நிறுவனத்தின் காடு வளர்ப்பு பணியகத்தின் தலைவர் வெய் தியான் சேங் கூறியதுவது—
20 ஆண்டுக்கால கட்டுமானம் மூலம், சில பிரதேசத்தில் உயிரின வாழ்க்கைச் சூழல் தெளிவாக மேம்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, வடகிழக்குச் சீனாவிலுள்ள ஹெய் லுங் ஆறு, சுங் குவா ஆறு, நென் சியாங் ஆறு ஆகிய ஆற்றுச் சமவெளியில் விளை நிலத்துக்கான வனப் பாதுகாப்பு நாடா முறைமை கட்டி முடிக்கப்பட்டுள்ளது, உள்மங்கோலிய தன்னாட்சி பிரதேசத்திலுள்ள கெர்சின் மணல் பரப்பில், தாவரத்தின் பரப்பளவு பெருமளவில் அதிகரித்துள்ளது என்றார் அவர். 1 2 3
|