சீனாவில் குடும்ப நலத் திட்டம் காரணமாக, ஒரு குழந்தை நிலை, குழந்தைகளில் வகிக்கும் விகிதாசாரம் தீவிரமாக அதிகரித்து வருகின்றது. சீன மக்கள் தொகை தகவல் ஆய்வு மையம் வழங்கிய புள்ளி விபரங்களின் படி, 1995ல் 32 கோடி சீனக் குடும்பங்களில் 20.72 விழுக்காட்டு குடும்பங்கள் ஒரே ஒரு பிள்ளையைக் கொண்ட குடும்பங்களாகும். எண்ணிக்கை, 6 கோடியே 60 லட்சம் ஆகும்.
இப்போது சீனாவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 34 கோடியாகும். ஒரே ஒரு பிள்ளை என்பது பெரும்பாலும் நகரங்களில் தான். அவர்களுடைய பெற்றோர் குறிப்பிட்ட அளவு கல்வி மற்றும் பொருளாதார ஆற்றல் உடையவர்கள். இதனால் சாதாரண குழந்தைகளை விட அவர்கள் மேலும் சிறப்பான மருத்துவ வசதி, கல்வி மற்றும் தகவல் மூலவளங்களைப் பெற முடிந்தது. ஆகவே அவர்கள் எதிர்கால சமுதாயத்தின் முக்கிய ஆற்றலாக விளங்குவர். இவர்களுடைய வளர்ச்சி சீனாவின் எதிர்காலத்துக்குப் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தும்.
1 2 3
|