யாங்சி ஆற்றுப்பள்ளத்தாக்கிலான வனப் பாதுகாப்பு நாடா முறைமை, முன்பு விளை நிலமாக இருந்த வனப்பிரதேசத்தில் மரம் நடுவது, மணல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பணி முதலியவை இத்திட்டப்பணியில் இடம்பெறுகின்றன. கடந்த சில ஆண்டுகளில் சீனாவில், காடு வளர்ப்பு பரப்பளவு ஆண்டுக்கு 66 லட்சம் ஹெக்டருக்கும் அதிகமாகும். இப்போது, 4 கோடியே 40 லட்சம் ஹெக்டர் வனப் பரப்பளவுடைய சீனா, உலகில் மிகப் பெரிய செயற்கை காடு கொண்டுள்ள நாடாகும்.
சீனாவின் ஆன் குய் மாநிலத்திலுள்ள நிங் கோ நகர், காடு வளர்ப்பு பணியில் வெற்றி பெற்றுள்ளது. இந்நகராட்சியின் துணைத் தலைவர் யு ஹோங் கன் கூறியதாவது—
6, 7 ஆண்டுக்கால முயற்சி மூலம், நிங் கோ நகரில் காடு வளர்ப்பு பரப்பளவு 4 விழுக்காடு அதிகரித்துள்ளது. தற்போது இது 70 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. யாங்சி ஆற்று முகத்துவாரத்தின் விளிம்பில், சீரான உயிரின வாழ்க்கைச் சூழ்நிலை, விரைவான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைக் கொண்ட பசுமை நகர் உருவாக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
1 2 3
|