இந்நகரின் வனத்தொழில் வளர்ச்சி, நீர் மண் வளத்துக்கான பாதுகாப்பு ஆகியவை, ஹாங் சோ, ஷாங்காய் முதலிய நகர்களிலான, நீரின் தரம் உள்ளிட்ட சூழ்நிலையின் மேம்பாட்டுக்கு முக்கிய பங்காற்றியுள்ளன.
பல பத்து ஆண்டு வளர்ச்சி மூலம், காடு வளர்ப்புத் துறையில் பயன் மிக்க வழிமுறையை சீனா கண்டறிந்துள்ளது. இது பற்றி, வெய் தியான் சேங் கூறியதுவது—
சீனாவில், காடு வளர்ப்புக்கான ஒழங்குமுறையில், மூன்று அம்சங்கள் இடம்பெறுகின்றன. ஒன்று, காடு வளர்ப்பு திட்டப்பணியில், அரசு முதலீடு செய்கிறது. இரண்டு, மரம் நடும் சிரமதான இயக்கத்தில், ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 3, 5 மரங்களை நட வேண்டும். மூன்று, சமூகம் காடு வளர்ப்பது மூலம், பொருளாதார மரம் நட வேண்டும், இயற்கை காட்சி வளத் தன்மையுடைய சிறப்பு காடு வளர்க்க வேண்டும். இதன் மூலம் சுற்றுலா நடவடிக்கை மேற்கொண்டு, பொருளாதாரப் பயன் பெற வேண்டும் என்றார் அவர்.
1 2 3
|