தற்போது, மலட்டு மலை, மணல் நிலம், நீர் மற்றும் மண் அரிப்பு மிகுந்த இடம் ஆகியவற்றில் செயற்கையாக வளர்த்த காடு அமைந்துள்ளது. சீன வனத் தொழில் வளர்ச்சிக்கான நீண்டகால குறிக்கோளுக்கேற்ப, 2050ஆம் ஆண்டுக்குள், சீனாவில் காட்டின் பரப்பளவு, 16.55 விழுக்காட்டிலிருந்து 26 விழுக்காடாக அதிகரிக்கலாம்.
காடு வளர்ப்புத் துறையில், பல்வகை சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றத்தை சீனா நடைமுறைப்படுத்தியுள்ளது. சம ஒத்துழைப்பு, பரஸ்பர நலன் எனும் அடிப்படையில், பிற நாடுகளுடன் இணைந்து மனித குலத்தின் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்குச் சீனா பங்காற்ற விரும்புகிறது. 1 2 3
|