இந்தப் பிள்ளைகளின் உளவியல் நிலை எப்போதும் விவாதத்துக்குரியது. சீன இளைஞர் ஆய்வு மையத்தின் குழந்தை ஆய்வகம் இது பற்றி 1996—97 ஆண்டுகளில் களஆய்வு மேற்கொண்டு, சில முக்கிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தது. முழு நம்பிக்கை கொள்வது, மற்றவருக்கு உதவுவதில் பேரார்வம் கொள்வது, நட்பை ஆவலுடன் எதிர்பார்ப்பது, வளர்ச்சியை ஆக்கப்பூர்வமாக நாடுவது, பல நிகழ்ச்சிகளில் பேர் ஆர்வம் கொள்வது என்பவை, ஒரே ஒரு பிள்ளைகளின் மேம்பாடாகும் என்று தெரிய வந்தது.
இதற்கிடையில், அலட்சியப்படுத்த முடியாத சில குறைபாடுகளும் அவர்களுக்கு உண்டு. எடுத்துக்காட்டாக குறிப்பிட்ட சில இன்னல்களைச் சமாளித்து வெற்றி பெறும் ஆற்றல் அவர்களிடம் குறைவு. நண்பர்களுடன் பழகும் போது, எளிதில் மற்றவரைப் புண்படுத்துகின்றனர். அயரா உழைப்பு, சிக்கனம், படிப்பு ஆகியவற்றில் ஆர்வம் குறைவு.
1 2 3
|