இத்தகைய குடும்ப அமைவு, அதாவது சிறிய குடும்ப வடிவம், முன்னர் இருந்த பெரிய குடும்ப மாதிரிக்குப் பதிலியாகலாம். இவர்கள் தமது பொருளாதார ஆற்றல், தேவை ஆகியவற்றுக்கேற்ப, வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்கலாம். இவர்கள் பாரம்பரிய திருமண சடங்குகளைக் கைவிடுகின்றனர்.
மாறாக, மேலை நாடுகளில் நடைமுறையில் உள்ள தேன்மதி அதாவது ஹனிமூன் பயணம், திருமண ஆடையை அணிந்து நிழற்படம் எடுப்பது, கத்தோலிக்க கோவிலில் திருமணம் ஆகியவற்றில் இவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஒரே ஒரு பிள்ளைகளைப் பொறுத்து, சீனாவின் புதிய திருமணச் சட்டம், கட்டுப்பாட்டு ஆற்றலைக் குறைத்துள்ளது. இவர்களுடைய கடபாட்டுணர்வை அதிகரித்துள்ளது. இப்போது சீனாவில் பெரும்பாலான இளைஞர்கள் ஒரே ஒரு பிள்ளைகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது அறியத்தக்கது. 1 2 3
|