• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-08-09 17:18:08    
விளையாட்டுச் செய்திகள்

cri

கால்பந்து

ஆசிய கோப்பைக்கான கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று இரவு பெய்சிங்லுள்ள தொழிலாளர் திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. ஜப்பானிய அணி 3-1 என்ற கோல் கணக்கில் சீன அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வெற்றிகரமாக தக்கவைத்து கொண்டது. சீன அணி இரண்டாம் இடம் பெற்றது. இருந்தும். இது சீன அணியின் வரலாற்றில் மிக சிறந்த சாதனையாகும். ஈரான் அணி மூன்றாம் இடம் பெற்றது.

ஆசிய கோப்பைக்கான கால்பந்து போட்டி, ஏற்பாட்டு பணியிலும் சரி, போட்டி தரத்திலும் சரி, ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் உயர்நிலை அதிகாரிகளின் பாராட்டை பெற்றுள்ளது. இந்த போட்டி வரலாற்றில் மிக சிறந்தது. மிகவம் மனநிறைவு அடைகின்றேன் என்று 5ந் நாள் பெய்சிங்கில் ஐ. நா குழந்தைகள் நிதியம் தொடர்பான நிகழ்ச்சியில் இச்சம்மேளனத்தின் தலைவர் ஹாமன் கூறினார். இந்த விழாவில் விளையாட்டு வீரர்கள் கையொப்பமிட்ட விளையாட்டு ஆடை, போட்டியில் பன்படுத்தப்பட்ட பந்து ஆகியவை ஏலம்விடப்பட்டன. இதன் மூலம் பெற்றுள்ள 5 லட்சத்து பத்தாயிரம் ரென்மின்பி யுவான் வருமானம் எல்லாம் ஐ. நா குழந்தைகள் நிதியத்துக்கு நல்கொடையாக வழங்கப்படும். இந்தத் தொகை சீன குழந்தைகளின் எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும்.

ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் 9வது செயல் கமிட்டிக் கூட்டம் 6ந் நாள் பெய்சிங்கில் நடைபெற்றது. 2007ஆம் ஆண்டுக்கான ஆசிய கால்பந்து போட்டி, இந்தோநேசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நான்கு தென்கிழக்காசிய நாடுகளில் நடைபெறுவதென கூட்டத்துக்குப் பின் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் இச்சம்மேளனத்தின் தலைவர் ஹாமன் அறிவித்தார். ஆசியா ஒரு பெரிய கண்டம், ஆசியாவின் மிக உயர்நிலை கால்பந்து போட்டியை நடத்த சம்மேளனத்தின் அனைத்து உறுப்பினரும் மிகவும் ஆவல்படுகின்றன. இப்போட்டியை நடத்துவதில் மேலும் கூடுதலான உறுப்பினர்கள் பங்கு கொள்வதற்கு துணை புரியும் வகையில் செயல் கமிட்டி இவ்வாறு முடிவு செய்துள்ளது என்று ஹாமன் விளக்கிக் கூறினார்.

1  2  3