• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-08-17 14:09:49    
கதைப்பாடல் கலைஞர் ஹொ சொங் குவா

cri

சீனாவின் வளமிக்க கதைப்பாடல் கலை வடிவங்களில் ஒன்று, ஹுபெய் சியௌ சியூ. இது மத்திய சீனாவின் ஹுபெய் மாநிலத்தில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வருகிறது. தற்போது படிப்படியாக தளர்ச்சியுற்று அழிவின் விளிம்பில் உள்ளது. இருந்தாலும், புகழ்பெற்ற கதைப்பாடல் கலைஞர் ஹொ சொங் குவா அம்மையார் இந்த நாட்டுப்புறக்கலையின் வளர்ச்சிக்காக அயராதுழைத்து வருகிறார்.

ஹுபெய் சியௌ ச்சு எனும் நாட்டுப்புறப்பாடலானது, மின் மற்றும் சிங் வமிச ஆட்சிக்காலத்தில் அதாவது 1368-1911 காலகட்டத்தில் பொது மக்களிடையே வழங்கி வந்த நாட்டுப்புறப்பாடலில் மாற்றுக் கதைப் பாடல் வடிவமாகும். அதன் கலை வடிவம் கட்டுப்பாடற்ற முறையில் அமைகிறது. ஒருவர் பாரம்பரிய இசைக் கருவியை இசைப்பதுடன் தாமே பாடலாம். ஒருவர் மத்தளம் அடிப்பதுடன், மற்றொருவர் சிறு தட்டைத் தட்டிப் பாடலாம். பாடகர் ஹுபெய் வட்டார மொழியில் பாடுவார். பாடல் அருமையானது. சீர்மை மிக்கது. நாட்டுப்புற நறு மணம் கமழ்கிறது.

முன்பு இவ்வ்கை கதைப்பாடல், பொது மக்களிடையில் பாடபெற்றது. 1949இல் நவ சீனா நிறுவப்பட்ட பின் அரசின் பெரும் முயற்சியுடன் இவ்வகை கதைப் பாடல் மேடையில் அரங்கேற்றப்பட்டது. அப்போது தான் தமது கதைப்பாடல் வாழ்க்கையை ஹொ சொங் குவா துவங்கலானார்.

1  2  3