• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-08-17 14:09:49    
கதைப்பாடல் கலைஞர் ஹொ சொங் குவா

cri

1960ல் 13வது வயதில், துவக்கப்பள்ளிப் படிப்பை அவர் முடித்துக் கொண்டார். வாழ்க்கை இன்னல் மிகுந்து விளங்கியதால் அவர் பணிபுரிய வேண்டி ஏற்பட்டது. கண்பார்வையற்ற கலைஞர் ஒருவரிடம் இந்தக் கதைப்பாடல் கலையைக் கற்க அனுப்பப்பட்டார். அவர் சிரமப்பட்டுப் பயின்றார். அவருடைய ஆசிரியர் காலமானார். வேறு வழியின்றி கதைப்பாடல் முதலிய பல்வகை நாட்டுப்புற கலைகளைக் கற்க நேரிட்டது.

ஆசிரியர் சியான் ச்சின் சென் அவருக்கு மீண்டும் ஹுபெய் சியௌ ச்சுவைக் கற்பித்தார். அவர் கண்டிப்பானவர். ஹொ சொங் குவா நாள்தோறும் காலை ஐந்து மணிக்கு படுக்கையை விட்டு எழுந்து விடா முயற்சியுடன் பயின்றார். இது குறித்து, அவர் கூறியதாவது—

"ஆசிரியர் சியான் எனக்கு சிறந்த கலை அடிப்படையை உருவாக்கித் தந்தார். கதைப்பாடலானது சீனாவின் தலைசிறந்த பாரம்பரிய கலைவடிவம் என்பதை உணர்ந்து கொண்டேன். இதனால் இதை நேசிக்கிறேன்".

15வது வயதில் ஹுபெய் கதைப்பாடல் அரங்கில் தமது திறமையை அவர் வெளிப்படுத்தினார்.

ஆனால் அவருடைய கலை பாதை தடைகளைச் சந்தித்தது. 1966ல் பண்பாட்டுப்புரட்சியால் அவர் பெரிதும் பாதிக்கப்பட்டார்.

1970ஆம் ஆண்டுகளின் இறுதியில் அவர் மீண்டும் மேடைக்குத் திரும்பினார். ஹுபெய் சியௌ ச்சுவில் சீர்திருத்தம் மேற்கொண்டார். அவர் கூறியதாவது—

"நீண்ட கதைப்பாடல் மீது, நாங்கள் பரிசோதனை முறையில் சீர்திருத்தம் மேற்கொண்டோம். கதை மூலம் பார்வையாளரைக் கவர்வது, நகைச்சுவையால் அவர்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுவது, கதை நிகழ்ச்சி கொண்டு அவர்களை நெகிழச்செய்வது ஆகிய மூன்று துறைகளில் சீர்திருத்தம் மேற்கொண்டோம்".

1  2  3