தென் சீனாவின் நீதிபதி பாவ், மன்னருக்காக காமக்கிழத்தியைத் தேர்ந்தெடுப்பது என்பது நீண்ட கதைப்பாடலாகும். ஹொ சொங் குவா படைத்து நடித்த ஹுபெய் சியௌ ச்சுவின் முதலாவது நீண்ட கதைப்பாடல் இதுவாகும். இதில் பாரம்பரியத்தை உடைத்தெறிந்து, வசனம் பேசுவதன் மூலம் கதை நிகழ்ச்சியை வெளிப்படுத்தி, கதாமாந்தரின் உணர்வை எடுத்துக் காட்டினார். இது பார்வையாளர்களிடையில் பெரும் பரப்பரப்பை ஏற்படுதிதயதுடன், பல விருதுகளையும் பெற்றது.
வியன்நாவில் நடைபெற்ற சர்வதேச நாட்டுப்புறப்பாடல் மற்றும் இசை விழாவில் அவர் கலந்து கொண்டார். வெளிநாட்டு நேயர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டார். அவர் இசை கருவியாகக் கொண்டு போன பத்து சிறிய தட்டுகள் அனைத்தையும் பார்வையாளர்கள் எடுத்துக் கொண்டனர். பாரம்பரிய கதைப்பாடல் கலையைக் காப்பாற்றும் பொருட்டு வழித்தோன்றல்களைப் பயிற்றுவிப்பதில் ஹொ சொங் குவா முனைப்புடன் ஈடுபட்டுள்ளார். 1 2 3
|