 புகை பிடிப்பதானது உடல்நலத்துக்குப் பெரிதும் தீங்குவிளைவிக்கும் செயலாகும். நுரை ஈரல் புற்று நோய், இதய நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு இது ஊற்று மூலமாகும். தற்போது உலகில் சுமார் 110 கோடி பேர் புகைபிடிக்கின்றனர். இதன் விளைவாக, ஆண்டுதோறும், 35 லட்சம் பேர் மரணமடைகின்றனர்.
சீனாவின் சியெஹு மருத்துவ பல்கலைக்கழகப் பேராசிரியர் யான் குழ்குவென் இப்பிரச்சினை பற்றிய நிபுணராகத் திகழ் கின்றார். புகை பிடிப்பதைக் கட்டுப்படுத்தா விட்டால், எதிர்வரும் 30 ஆண்டுகளில் சீனாவில் புகை பிடிப்போரின் எண்ணிக்கை 43 கோடியாக அதிகரிக்கும். இதன் விளைவாக, பிரச்சினை மேலும் கடுமையாகும் என்று அவர் கூறுகின்றார்.
1 2 3
|