• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-08-19 15:21:13    
புகைபிடிப்பதைக் கட்டுப்படுத்துவது நன்று

cri

புகை பிடிப்பதை சீனா கட்டுப்படுத்தினால் நோயை மட்டுமல்ல மரணவிதத்தையும் குறைக்கலாம். இதன் மூலம் உழைப்பாற்றல் பாதுகாக்கப்படும் என்றார் அவர்.

புகை பிடிப்பதைக் கட்டுப்படுத்தும் பணியில் சீனா மிகவும் கவனம் செலுத்தி வருகின்றது. எடுத்துக் காட்டாக, "புகையிலைக்கான சிறப்பு விற்பனைச் சட்டம்", "விளம்பரச் சட்டம்", "இளைஞர்களைக் காப்பாற்றும் சட்டம்", "பொது இடங்களில் நலவாழ்வுக்கான நிர்வாக விதிகள்" என 20க்கும் அதிகமான சட்டங்கள், சட்டவிதிகள் ஆகியவற்றை நிறைவேற்றியுள்ளது. புகை பிடிப்பதைக் கட்டுப்படுத்துவதுடன் அவை தொடர்புடையவை. வானொலி, திரைப்படம், தொலைக்காட்சி, செய்தித் தாள், இதழ் ஆகியவற்றில் புகையிலை பற்றிய விளம்பரம் வெளியிடலாகாது என்று வகுத்துள்ளது.

பிரச்சாரத்தின் மூலம் அறிவுரை வழங்குவது, புகை பிடிப்போர் புதிதைர உருவாவதைத் தடுக்கும் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும். சிகரெட் விளம்பரம் இல்லாத நகரம், புகைபிட்ப்பற்ற மருத்துவ மனை, பள்ளி ஆகியவற்றை நிறுவுவது முதலான நடவடிக்கை மூலம் பொது மக்களின் புகை பிடிப்பதைக் கட்டுப்படுத்தும் உணர்வை உயர்த்த சீனா பாடுபடுகின்றது. மே திங்கள் 31, உலகின் புகைபிடிப்பற்ற அல்லது புகைபிடிப்பு தடுப்பு நாளாகும். இதற்கு முன்னும் பின்னும், பல்வேறு இடங்களில் ஆலோசனை அளிப்பது வகுப்பு நடத்துவது, பிரச்சாரத் துண்டுகளை விநியோகிப்பது போன்ற பல்வகை நடவடிக்கைகள் நடைபெறும். இவற்றின் மூலம் புகை பிடிப்பு பாதிப்பை பரவலாக எடுத்துக் கூறப்படுகின்றது.

1  2  3