• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2004-08-19 15:21:13    
புகைபிடிப்பதைக் கட்டுப்படுத்துவது நன்று

cri

இளைஞர் பெண்டிர் ஆகியோரிடையே புகை பிடிக்கும் விழுக்காடு அதிகரித்துள்ளது. இவர்களிடையே பிரச்சாரக் கல்வியை சீனா முக்கியமாக மேற்கொண்டுள்ளது. பெய்சிங் மாநகரின் 7வது இலக்க இடைநிலைப் பள்ளியில் கண்ணை ஈர்க்கும் இடத்தில் புகை பிடிப்பதைக் கட்டுப்படுத்தும் பிரச்சார சுவரொட்டி இடம்பெறுகின்றது. சில கட்டுரைகள், ஓவியங்கள் ஆகியவை புகை பிடிப்பதானது, தனியார் குடும்பம் சமூகம் ஆகியவற்றுக்கு ஏற்படுத்தும் தீங்கு பற்றி விவரமாக எடுத்துகூறுகின்றன. மாணவர்கள் இடைவேளையிலும் ஓய்வு நேரத்திலும் இவற்றைப் படித்து அறிவு பெறலாம். இத்தகைய பிரச்சாரக் கல்வி நடவடிக்கை பெய்சிங், ஷாங்காய் ஆகிய மாநகரங்களிலும் சான்துந், குவாந்துங் முதலிய மாநிலங்களிலும் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

தவிர, சீனாவின் பல்வேறு இடங்களிலுள்ள இடைநிலை மற்றும் துவக்கப் பள்ளிக் கூடங்களில் ஆண்டுக்கு ஒரு முறை முதலாவது சிகரெட்டை மறுத்து இதைப் பிடிக்காத புதிய தலைமுறை வளருவதென்ற அம்சம் கொண்ட பிரச்சார கல்வியளித்து கையொப்பமிடும் நடவடிக்கை நடைபெறுகின்றது. இதன் மூலம் தம் வாக்குறுதியை நிறைவேற்ற மாணவர்களுக்கு ஊக்கமளிக்கப்படுகிறது. இதுவரை நாடு முழுவதிலும் 70 லட்சம் இடைநிலை மற்றும் துவக்க பள்ளி மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். பெய்சிங்வாசியான வுவான் சின் எனும் மாணவி கூறினார். முன்பு எற்றவர் புகைபிடிப்பதை பார்த்த போது, அது பேஃஷன் என்று நினைத்தேன். ஆனால், புகை பிடிப்பதனால் ஏற்படும் பாதிப்பு எவ்வளவு கடுமையானது என்று இப்போது தெரிந்து கொண்டேன். எனவே, புகைப்பதைக் கைவிடுவது கடினம் தான். ஆயினும் இளைஞர் இதைக் கைவிட்டு சிகரெட்டைத் தொடவே கூடாது என்று வுவான் சின் கூறினார்.


1  2  3