அவர் பதவி ஏற்றவுடன், 10 முக்கியமான வழக்குகளில் ஒன்றான ஓங் சொங் குழு வழக்கைத் துப்பு துலக்கினார். தெங் புங் நகர் சொங் புங் கூட்டு நிறுவனத்தின் முதலாளி ஓங் சொங், தனது குடும்ப உறுப்பினரையும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட உறுப்பினரையும் ஒன்று திரட்டி, உள்ளூர் மக்களைத் துன்புறுத்தி அடக்கி ஒடுக்கினார். இதனால் சிலர் மரணமடைந்தனர். ழென் சாங் சியாவும் மற்ற காவல்துறையினரும் 9 மாநிலங்கள் நகரங்களுக்குச் சென்று, ஓங் சொங் குழுவினர் 60 பேரைக் கைது செய்தனர். இந்நற்செய்தி பரவியதும், செங் புங் நகர மக்கள் அணி திரண்டு, 3 நாள் கொண்டாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
2002ல் லி சிங் ஜியென் தலைமையிலான குழுவினர், சில இடங்களில் வலுக்கட்டாயமாக கொள்வனவும் விற்பனவும் செய்து வந்தனர். மகளிரை கற்பழித்து வந்தனர். இது சமுதாயத்துக்குத் தீய பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. ழென் சாங் சியா, விவரங்களைச் சேகரிக்கும் வகையில், முயல் ரோமம் சேகரிக்கும் சிறு வியாபாரி வேடம் பூண்டு விவசாயி குடும்பங்களைச் சந்தித்தார். அதே ஆண்டு ஜுன் திங்களில், அவர் தலைமையில் 150 காவல்துறையினர் இந்தக் குழுவை அழித்தொழித்தனர். இக்குழுவின் உறுப்பினர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். 1 2 3
|