B&Q என்பது, ஐரோப்பாவில் மிகப் பெரிய கட்டிடப் பொருள் சிறப்பு அங்காடியாகும். பிரிட்டனைச் சேர்ந்த B&Q வீட்டு அலங்கார கட்டிடப் பொருள் தொடர் கடையான அது, இது வரை சீனாவில் மொத்தம் 18 தொடர் கடைகளைத் திறந்து வைத்துள்ளது. அவற்றில், தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாநிலத்து குன் மிங் நகரிலான கடை, தலைமையகத்திலிருந்து தொலைவிலுள்ள ஒன்றாகும். கடல் மட்டத்திலிருந்து மிக உயரத்தில் இருக்கின்றது. B&Q குன் மிங் கூட்டு முதலீட்டு கூட்டு நிறுவனத்தின் பொது தலைமை மேலாளர் ஹு யு மின் கூறியதாவது:
"யுன்னான் உள்ளிட்ட மாநிலங்களில் நடைமுறைக்கு வந்துள்ள மேற்குப் பகுதிக்கான பெரும் வளர்ச்சி என்ற நெடுநோக்குத் திட்டம், சீனாவில் மிகவும் முக்கியமானது. இதனால், குன் மிங் நகரை எங்கள் தளமாகத் தெரிவு செய்தோம். குன் மிங், ஒரு சுற்றுலா நகர். எதிர்காலத்தில், ஒரு சர்வதேச மாநகராக வளர்ச்சியுறலாம். திட்டப்பணியை உட்புகுத்தும் போக்கில், நாங்கள் அதிகமாக அறிந்து கொண்டுள்ளோம். குன் மிங் நகரில் கூட்டு நிறுவனத்தை வளர்ச்சியுறச்செய்வதில் மிகவும் நம்பிக்கை ஆர்வம் கொண்டுள்ளோம்." என்றார் அவர். 1 2 3
|