
Yun Nan மாநிலமானது, மேற்குப் பகுதிக்கான பெரும் வளர்ச்சி என்ற நெடுநோக்குத் திட்டம் நடைமுறைக்கு வந்த மாநிலங்களில் ஒன்றாகும். சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டர் தேசிய எல்லை கொண்ட இம்மாநிலம், வியட்நாம், லாவோஸ், மியன்மர் ஆகிய நாடுகளை ஒட்டியமைந்துள்ளது. இம்மாநிலத்தில், வளமிக்க அரிய காட்டு விலங்கு மற்றும் தாவர வகைகள் இருக்கின்றன. இது, விலங்கு மற்றும் தாவரவியல் வட்டாரங்களால் பூமி உயிரின வகைகளின் மரபணுக் கிடங்கு என்று அழைக்கப்படுகிறது. தனிச்சிறந்த புவியியல் நிலை மற்றும் மூலவள மேம்பாடு, மேற்குப் பகுதிக்கான பெரும் வளர்ச்சி என்ற கொள்கை ஆகியவற்றால், Yun Nan மாநிலம், அன்னிய வணிகர்களின் கவனத்தை ஈர்க்கும் முதலீட்டுச் சந்தையாக மாறிவருகிறது. 1 2 3
|