ழென் சாங் சியா பதவிக்கு வந்த 3 ஆண்டுகளில், பெருவாரியான வழக்குகளைத் துப்பு துலக்கினார். பணியகத்தில், ஒழுக்கக்கேட்டுக் குற்றம் இழைத்த காவல்குறையினர் பலரை பணி நீக்கம் செய்தார். காவல்துறையினர் அணியின் கட்டுப்பாட்டைச் சீர் செய்தார். இதனால், தெங் புங் நகர காவல்துறை அலுவலகம், 30 நிர்வாகப் பிரிவுகளின் நடத்தை திறனாய்வில், இறுதி இடத்திலிருந்து 5வது இடத்துக்கு உயர்ந்துள்ளது.
மக்களின் விவகாரங்களைக் கண்டறியும் பொருட்டு, ழென் சாங் சியா அடிக்கடி மாறு வேடம் பூண்டு, கிராமப்புறங்களுக்குச் செல்வார். விவசாயி, சிறு வியாபாரி, சேவையாளர் எனப் பல வேடம் பூண்டிருக்கிறார். மூன்று ஆண்டுகளில், மூவாயிரம் பேருக்கு அவர் பேட்டியளித்தார். தீர்க்கப்படாத 100க்கும் அதிகமான வழக்குகளைத் துப்பு துலக்கினார்.
1 2 3
|