ஏப்ரல் 14ஆம் நாள் இரவு செங் சோவில் கூட்டத்தில் கலந்து கொண்ட பின், தெங் புங் நகரில் ஒரு வழக்கைத் துப்பு துலக்குவதற்காக, அவர் இந்நகருக்கு விரைந்தார். அதில் வழியில், சாலை விபத்து நிகழ்ந்தது. அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 40. செய்தி பரவியதும் தெங் புங் நகர் மக்களும் அவருடைய குடும்பத்தினரும் எல்லையற்ற துயரக்கடலில் மூழ்கிவிட்டனர். அடுத்த மூன்று நாட்களில், 2 லட்சம் தெங் புங் மக்கள், பூச்செண்டுகளுடனும் இரங்கல் சுலோகப் பலகைகளுடனும் தங்களின் உள்ளம் கவர்ந்த ழென் சாங் சியா அம்மையாருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
20 ஆண்டு காவல்துறை வாழ்க்கையில், சிறந்த சேவைக்காக, அவர் பல முறை பரிசு பெற்றிருக்கிறார். அத்துடன், அனைத்து சீன மார்ச் எட்டு செங்கொடி வீராங்கனை, தலைசிறந்த சீன காவல்துறையினர், சீனாவின் பத்து வீராங்கனைகளில் ஒருவர் எனப் புகழாரம் சூட்டப்பெற்றார்.
ஜுன் 2ஆம் நாள், சீன பொது காப்பு அமைச்சர் சோ யூன் கான் கையொப்பமிட்ட கட்டளை, ழென் சாங் சியாவுக்கு "சீனக் காவல்துறையின் முதல் நிலை ஆதர்ச வீராங்கனை" என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. 1 2 3
|