ழென் சாங் சியா, அலுவலகத்திலேயே தங்கியிருந்து பணியாற்றினார். அவருடைய பணி நேரம், சாதாரண ஊழியர்களை விட ஒரு மடங்கு அதிகமாகும். அவருடைய கணவன் வெய் சியௌ சுன் கூறியதாவது—
"என் பார்வையில் அவள் மிகவும் நோஞ்சான். முதல் ஆண்டு, தெளிவில்லை. இரண்டாவது மூன்றாவது ஆண்டுகளில் இது மிகவும் தெளிவு. 'சாங் சியா இந்த இரண்டு ஆண்டுகளில் உனக்கு முதுமை வந்து விட்டதே' என்று நான் சொன்னேன். 'ஐயோ, வேறு வழியில்லையே. செய்து முடிக்க வேண்டிய பணி பல உண்டு' என்றாள். உயிர்த் தியாகம் செய்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், இரவு 11 மணியளவில், நான் அவளுக்குத் தொலை பேசி செய்தேன். எனக்கு கூட்டம் இருக்கிறது என்று அவள் கூறினாள். இது தான், எங்களின் இறுதி உரையாடலாகும்" என்றார் அவர்.
1 2 3
|