
இன்னொன்று, கார்ஸ்பெர்க் யுன்னான் தாலி பீர் குழுமம்; இது, டென்மார்க் கூட்டு நிறுவனமாகும். கடந்த ஆண்டின் செப்டம்பர் திங்களில், யுன்னான் தாலி பீர் குழுமத்தை அது பொறுப்பேற்றுக்கொண்டது. இதற்கு முன்னர், யுன்னான் மாநிலத்தின் அரசு பீர் தொழிலில், தாலி பீர் குழுமம் மிகப் பெரிய பீர் தொழில் நிறுவனமாகும். இதன் பொது தலைமை மேலாளர் யாங் சே பியாவ் கூறியதாவது:
"வியட்நாம், லாவோஸ், புருணை, மலேசியா, தாய்லாந்து ஆகியவற்றில் தொழில் நிறுவனங்களை கார்ஸ்பெர்க் நிறுவியுள்ளது. யுன்னான் மாநிலம், தென்கிழக்காசியாவை ஒட்டியமைந்துள்ளதால், பெரிய சந்தை வலைப் பின்னலை உருவாக்கி, ஆசியாவில் குறிப்பாக சீனாவில் குழுமத்தின் வளர்ச்சி நெடுநோக்குத் திட்டத்தை நனவாக்க கார்ஸ்பெர்க் விரும்புகிறது."என்றார் அவர்.
1 2 3
|