
சீனாவின் யுனான் மாநிலத்து Du Long ஆற்றங் கரையோரத்தில், சிறுபான்மைத் தேசிய இனமான Du Long இனத்தவர் தலைமுறை தலைமுறையாக வசித்து வந்துள்ளனர். சுமார் ஆறாயிரம் மக்கள் தொகையுடைய இவ்வின மக்கள், முக்கியமாக வேளாண்மையில் ஈடுபடுகின்றனர். Yang Jiangling என்பவர், இவ்வினத்தின் முதலாவது அறிவாளர் ஆவார்.
தற்போது, அவர், பெய்சிங்கில் குடியேறியுள்ளார். சீன சமூக அறிவியல் ஆய்வுத் துறையின் ஆணையுரிமை படைத்த நிறுவனமான சீன சமூக அறிவியல் கழகத்தின் ஓர் அறிவாளர். முக்கியமாக, திபெத்-மியன்மர் மொழி இயல் ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றார். திபெத் பொழி, மியன்மர் மொழி உள்ளிட்ட 30க்கும் அதிகமான மொழிகளின் குடும்பப் பெயர், இதுவாகும். அவற்றில், Yang Jiangling இன் தாய்மொழியான Du Long மொழியும் இடம்பெறுகின்றது.
1 2 3
|